திருமுறை 4 · 4.065 · 10

திருச்சாய்க்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
சாய்க்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்பாடுதான் செலலு மஞ்சிப் பாதமே சரண மென்னச்சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடுகடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபல் தேவ ரஞ்சிஅடைந்துநும் சரண மென்ன அருள்பெரி துடைய ராகித்தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
வடம் கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடுகடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சிஅடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகித்தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன்வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்யமுரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
அரண் இலா வெளிய நாவல் அருநிழலாக ஈசன்வரணியல் ஆகித் தன்வாய் நூலினால் பந்தர் செய்யமுரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித்தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்றுஉரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டேவரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
அரும் பெருஞ் சிலைக்கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்றுஉரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டேவரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும்சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடுமந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்றுசந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடுமந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்தத்தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்றுசந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்துபூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்கூர்மழு வொன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்துபூமலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்கூர் மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்டஐயமில் லமர ரேத்த ஆயிர முகம தாகிவையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்டஐயமில் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகிவையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்டஉவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத்தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கித் தூய வாய்க் கலசம் ஆட்டஉவப்பெருங் குருதி சோர ஒரு க(ண்)ணை இடந்துஅங்கு அப்பத்தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடுமிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணாதொக்குமென் மலர்க்கண் ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
நக்குலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடுமிக்க பூசனைகள் செய்வான் மென்மலர் ஒன்று காணாதுஒக்கும் என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ணை இடந்தும் அப்பச்சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்சவியன்பெற எய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டேசயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
சொற்பிரிப்பு
புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச்சிவன் திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்சவியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டேசயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.