திருமுறை 4 · 4.064 · 10

திருவீழிமிழலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பூதத்தின் படையர் பாம்பின்பூணினர் பூண நூலர்சீதத்திற் பொலிந்த திங்கட்கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்கீதத்திற் பொலிந்த ஓசைக்கேள்வியர் வேள்வி யாளர்வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர்கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வியாளர்வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்ஆலையிற் பாகும் போல அண்ணித்திட் டடியார்க் கென்றும்வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
காலையின் கதிர் செய் மேனி கங்குலில் கறுத்த கண்டர்மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ்இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர் இருவ ரோடும்பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யரா மவர்கட் கென்றும்விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
வரும் தினம் நெருநல் இன்று ஆய் வழங்கின நாளர் ஆல் கீழ்இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும்பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யராம் அவர்கட்கு என்றும்விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்தலையினாற் றரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்டவிலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பாகச்சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர் தங்கள்தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்டவிலை இலா வேடர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர்கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர்பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர்விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
மறையிடைப் பொருளர் மொட்டின் மலர் வழி வாசத் தேனர்கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர்பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்றபெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகிமண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர்விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
எண் அகத்து இல்லை அல்லர் உளர் அல்லர் இமவான் பெற்றபெண் அகத்து அரையர் காற்றில் பெருவலி இருவர் ஆகிமண் அகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர்விண்அகத்து ஒருவர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர்அந்தியோ டுதயம் அந்த ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர் சாம வேதர்எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்வெந்தழல் உருவர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டுஏற்றுழி ஒருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்டஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டுஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக் கண் நிறைய இட்டஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்வீற்றிருந்து அளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப்பத்திசெய் பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பி லாளர்முத்திசை பவள மேனி முதிரொளி நீல கண்டர்வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூடப்பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பு இலாளர்முத்தி செய் பவள மேனி முதிர் ஒளி நீல கண்டர்வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநி லாதுபொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாதுபொருப்பினை எடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ஆய்நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவத் தம் வாள்விருப்பொடும் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.