திருமுறை 4 · 4.063 · 10

திருவண்ணாமலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அண்ணாமலை
நாடு
நடுநாடு

1

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துளங்கும் எண்டோள் சுடர்மழுப் படையி னானேஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே.
சொற்பிரிப்பு
ஓதி மா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப் படையினானேஆதியே அமரர் கோவே அணி அணாமலை உளானேநீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீலகண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதாஅண்டனே அமரர் கோவே அணியணா மலையு ளானேதொண்டனேன் உன்னை அல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.
சொற்பிரிப்பு
பண் தனை வென்ற இன்சொல் பாவை ஓர் பங்க நீலகண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதாஅண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானேதொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்கஅருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவேமருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே.
சொற்பிரிப்பு
உருவமும் உயிரும்ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம்பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான் மிக்கஅருவி பொன் சொரியும் அண்ணா மலை உளாய் அண்டர் கோவேமருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்கஅம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானேஎன்பொனே உன்னை யல்லால் ஏதும்நான் நினைவி லேனே.
சொற்பிரிப்பு
பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண் நீற்றாய்செம்பொனே மலர் செய் பாதா சீர்தரு மணியே மிக்கஅம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானேஎன்பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகாமறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவாஅறைகழல் அமர ரேத்தும் அணியணா மலையு ளானேஇறைவனே உன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே.
சொற்பிரிப்பு
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர் பாகாமறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாம தேவாஅறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானேஇறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலாஅரிகுலம் மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்கவரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே.
சொற்பிரிப்பு
புரிசடை முடியின் மேல் ஓர் பொருபுனல் கங்கை வைத்துக்கரி உரி போர்வை ஆகக் கருதிய கால காலாஅரிகுலம் மலிந்த அண்ணா மலை உளாய் அலரின் மிக்கவரிமிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும்உரகமார் பவனம் எட்டுந் திசையொளி உருவ மானாய்அரவுமிழ் மணிகொள் சோதி அணியணா மலையு ளானேபரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே.
சொற்பிரிப்பு
இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும்உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய்அரவு உமிழ் மணிகொள் சோதி அணி அணாமலை உளானேபரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய்நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணியணா மலையு ளானேதீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.
சொற்பிரிப்பு
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானேதீர்த்தனே நின் தன் பாதத் திறம் அலால் திறம் இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானேமாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையு ளானேவாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பி லேனே.
சொற்பிரிப்பு
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானேமாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானேவாலுடை விடையாய் உன் தன் மலரடி மறப்பு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த எம்மான்உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியி னாலேஅரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமர ரேறேசிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.
சொற்பிரிப்பு
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலேஅரக்கனை நெரித்த அண்ணா மலை உளாய் அமரர் ஏறேசிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.