திருமுறை 4 · 4.062 · 10

திருவாலவாய்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்றோதியே மலர்கள் தூவி ஒருங்கிநின் கழல்கள் காணப்பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்ஆதியே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்றுஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்திஎன்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும்பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.
சொற்பிரிப்பு
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்திஎன்பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்பின் பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்பெரு மருந்து ஆகி நின்றாய் பேரமுதின் சுவையாய்க்கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல் வினைகள் தீர்க்கும்அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவேமையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ்சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவேமை அணி கண்டத்தானே மான்மறி மழு ஒன்று ஏந்தும்சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்ஐயனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும்உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தாரஅண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
வெண்தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆரஅண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும்வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்கஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
எஞ்சலில் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்வஞ்சகம் ஒன்றும் இன்றி மலரடி காணும் வண்ணம்நஞ்சினை மிடற்றில் வைத்த நன்பொருள் பதமே நாயேற்குஅஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன்செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்டகுழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ளஅழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்செழுமலர்ப் பாதம் காணத் தெண்திரை நஞ்சம் உண்டகுழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ளஅழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
நறுமலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்தசிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங்கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாகஅலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
நலம்திகழ் வாயின் நூலால் சருகுஇலைப் பந்தர் செய்தசிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்கலந்துடன் வந்து நின்தாள் கருதி நான் காண்பது ஆகஅலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலும் இருப துதோள்அடர்த்தனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
சொற்பிரிப்பு
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்க மாட்டேன்எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.