திருமுறை 4 · 4.061 · 11

திருஇராமேச்சுரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
இராமேச்சுரம்
நாடு
பாண்டியநாடு

1

பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்கவாசமிக் கலர்கள் கொண்டு மதியினால் மால்செய் கோயில்நேசமிக் கன்பி னாலே நினைமின்நீர் நின்று நாளுந்தேசமிக் கான் இருந்த திருஇரா மேச்சு ரமே.
சொற்பிரிப்பு
பாசமும் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்கவாசம்மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில்நேசம் மிக்கு அன்பினாலே நினைமின் நீர் நின்று நாளும்தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முற்றின நாள்கள் என்று முடிப்பதே கார ணமாய்உற்றவன் போர்க ளாலே உணர்விலா அரக்கர் தம்மைச்செற்றமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைப்பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே.
சொற்பிரிப்பு
முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய்உற்றவன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்செற்ற மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைப்பற்றி நீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித்திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றிஉடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே.
சொற்பிரிப்பு
கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம் முற்றித்திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றிஉடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குன்றுபோல் தோளு டைய குணமிலா அரக்கர் தம்மைக்கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்நன்றுபோல் நெஞ்ச மேநீ நன்மையை அறிதி யாயிற்சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇரா மேச்சு ரமே.
சொற்பிரிப்பு
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்கொன்று போர் ஆழி அம்மால் வேட்கையால் செய்த கோயில்நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்சென்று நீ தொழுது உய் கண்டாய் திருஇராமேச்சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற் படுத்துத்தீரமிக் கானி ருந்த திருஇரா மேச்சு ரத்தைக்கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.
சொற்பிரிப்பு
வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன்கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத்தீரம் மிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக்கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்புளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆர்வலம் நம்மின் மிக்கார் என்றஅவ் வரக்கர் கூடிப்போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்தேர்வலஞ் செற்ற மால்செய் திருஇரா மேச்சு ரத்தைச்சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை எந்தை பாலே.
சொற்பிரிப்பு
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அவ் அரக்கர் கூடிப்போர்வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்தேர் வலம் செற்ற மால் செய் திருஇராமேச்சுரத்தைச்சேர் மட நெஞ்சமே நீ செஞ்சடை எந்தை பாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வாக்கினால் இன்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மால்தான்தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைநோக்கினால் வணங்கு வார்க்கு நோய்வினை நுணுகு மன்றே.
சொற்பிரிப்பு
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்போக்கினால் புடைத்து அவர்கள் உயிர் தனை உண்டு மால் தான்தேக்கு நீர் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைநோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பலவுநாள் தீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்துகொலைவிலார் கொடிய ராய அரக்கரைக் கொன்று வீழ்த்தச்சிலையினான் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.
சொற்பிரிப்பு
பலவும் நாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்துகொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்தசிலையினான் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவமது ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்வீடவே சக்க ரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டுதேடிமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைநாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.
சொற்பிரிப்பு
கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டுதேடி மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைநாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்செங்கண்மால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்தங்கணால் எய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.
சொற்பிரிப்பு
வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார்புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டிச்செங்கண்மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி அரக்கர் கோனைவிரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்திரைகள்முத் தால்வ ணங்குந் திருஇரா மேச்சு ரத்தைஉரைகள்பத் தாலு ரைப்பார் உள்குவார் அன்பி னாலே.
சொற்பிரிப்பு
வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனைவிரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில்திரைகள் முத்தால் வணங்கும் திருஇராமேச்சுரத்தைஉரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.