1
மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானைநறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.
சொற்பிரிப்பு
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானைக்கறை அணி கண்டன் தன்னைக் கனல் எரி ஆடினானைப்பிறை அணி சடையினானைப் பெருவேளூர் பேணினானைநறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.