திருமுறை 4 · 4.058 · 10

திருப்பருப்பதம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
பருப்பதம்
நாடு
வடநாடு

1

கன்றினார் புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறிநின்றதோ ருருவந் தன்னால் நீர்மையும் நிறையுங் கொண்டுஒன்றியாங் குமையுந் தாமும் ஊர்பலி தேர்ந்து பின்னும்பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆகச் சீறிநின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டுஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்பன்றிப் பின் வேடர் ஆகிப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார்வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்தமுற்றவோர் சடையில் நீரை ஏற்றமுக் கண்ணர் தம்மைப்பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
கற்ற மா மறைகள் பாடிக் கடைதொறும் பலியும் தேர்வார்வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்தமுற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மைப்பற்றினார்க்கு அருள்கள் செய்து பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும்இரவுனின் றெரிய தாடி இன்னருள் செய்யும் எந்தைமருவலார் புரங்கள் மூன்று மாட்டிய நகைய ராகிப்பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்இரவில் நின்று எரி அது ஆடி இன்அருள் செய்யும் எந்தைமருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகிப்பரவுவார்க்கு அருள்கள் செய்து பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச்சுட்டிட்ட நீறு பூசிச் சுடுபிணக் காட ராகிவிட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்துபட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
கட்டிட்ட தலை கை ஏந்திக் கனல் எரி ஆடிச் சீறிச்சுட்டிட்ட நீறு பூசிச் சுடு பிணக் காடர் ஆகிவிட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்துபட்டு இட்ட உடையர் ஆகிப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்துமெய்யராய் மேனி தன்மேல் விளங்குவெண் ணீறு பூசிஉய்வரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்துபையரா அரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
கையராய்க் கபாலம் ஏந்திக் காமனைக் கண்ணால் காய்ந்துமெய்யராய் மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசிஉய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்துபை அரா அரையில் ஆர்த்துப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்துஓடரா யுலக மெல்லா முழிதர்வர் உமையுந் தாமுங்காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேற் கொண்டுபாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்துஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும்காடராய்க் கனல் கை ஏந்திக் கடியது ஓர் விடைமேல் கொண்டுபாடராய்ப் பூதம் சூழப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மேகம்போல் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்துஏகம்பம் மேவி னார்தாம் இமையவர் பரவி யேத்தக்காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப்பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்துஏகம்பம் மேவினார் தாம் இமையவர் பரவி ஏத்தக்காகம்பர் கழறர் ஆகிக் கடியது ஓர் விடை ஒன்று ஏறிப்பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்லபாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்கார் உடைக் கண்டர் ஆகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்லபாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அங்கண்மா லுடைய ராய ஐவரா லாட்டு ணாதேஉங்கள்மால் தீர வேண்டில் உள்ளத்தா லுள்கி யேத்துஞ்செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர்பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
அங்கண்மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதேஉங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அடல்விடை யூர்தி யாகி அரக்கன்றோள் அடர வூன்றிக்கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாஞ்சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப்படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே.
சொற்பிரிப்பு
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றிக்கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசிப்படர்சடை மதியம் சேர்த்திப் பருப்பதம் நோக்கினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.