திருமுறை 4 · 4.057 · 10

திருஆவடுதுறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆவடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானேதுஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்றுஅஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய்நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானேதுஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்றுஅஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும்ஊனுகந் தோம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்ட னேன்நான்ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன் நான்ஆன் உகந்து ஏறுவானே ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய்ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன்பட்டவான் தலைகை யேந்திப் பலிதிரிந் தூர்கள் தோறும்அட்டமா வுருவி னானே ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய்ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்அட்டமா உருவினானே ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன்ஒருமையால் உன்னை உள்கி உகந்துவா னேற மாட்டேன்கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேன்நான்அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏற மாட்டேன்கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்அருமையாம் நஞ்சம் உண்ட ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக்கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்துஅட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து,அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும்ஓரழல் அம்பி னாலே யுகைத்துத்தீ எரிய மூட்டிநீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்ஆரழல் ஏந்தி யாடும் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
கார் அழல் கண்டம் மேயாய் கடிமதில் புரங்கள் மூன்றும்ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டிநீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூற மாட்டேன்நெறிபடு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினைய மாட்டேன்அறிவு இலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாயசீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்றுஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்ஆலமா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆயசீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்றுஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெடியவன் மலரி னானும் நேர்ந்திரு பாலும் நேடக்கடியதோர் உருவ மாகிக் கனலெரி யாகி நின்றவடிவின வண்ண மென்றே என்றுதாம் பேச லாகார்அடியனேன் நெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
நெடியவன் மலரினானும் நேர்ந்து இரு பாலும் நேடக்கடியது ஓர் உருவம் ஆகிக் கனல் எரி ஆகி நின்றவடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை அஞ்சத்தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாளஉலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற் கருள்கள் செய்துஅலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.
சொற்பிரிப்பு
மலைக்கு நேர் ஆய அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாளஉலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள் செய்துஅலைத்த வான் கங்கை சூடும் ஆவடு துறை உளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.