திருமுறை 4 · 4.056 · 10

திருஆவடுதுறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆவடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன்ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலுங்கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும்அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்குடந்தையில் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனைக் காய்வர் போலும்அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ்செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலுங்கற்றவர் பரவி யேத்தக் கலந்துலந் தலந்து பாடும்அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும்எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலுந்தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லிஅழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம் பலவும் சொல்லிஅழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலுங்கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும்வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர்அடிமையை அளப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும்கடியது ஓர் விடையர் போலும் காமனைக் காய்வர் போலும்வெடிபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்அடிமையை அளப்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந்துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும்துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும்அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும்அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்தநந்திமா காள ரென்பார் நடுவுடை யார்கள் நிற்பச்சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்தநந்தி மாகாளர் என்பார் நடு உடையார்கள் நிற்பச்சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்அந்தி வான் மதியம் சூடும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலுந்தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுக முடைய கோவுந்தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும்ஆனரை ஏற்றர் போலும் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்தீனரைத் தியக்கு அறுத்த திருஉரு உடையர் போலும்ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங்கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னைஆர்த்தவாய் அலறு விப்பார் ஆவடு துறைய னாரே.
சொற்பிரிப்பு
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்கூத்தராய்ப் பாடி ஆடிக் கொடுவலி அரக்கன் தன்னைஆர்த்தவாய் அலறுவிப்பார் ஆவடு துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.