திருமுறை 4 · 4.055 · 10

திருவலம்புரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
வலம்புரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத்தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத் தடிகள் தம்மைக்கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தாம் இருந்த வாறே.
சொற்பிரிப்பு
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும் காலைத்தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது அடி வணங்கி எங்கும்வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள் தம்மைக்கொண்டு நல் கீதம் பாடக்குழகர் தாம் இருந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்தொடுத்தநன் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி யேத்தவடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.
சொற்பிரிப்பு
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கைப்பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்தவடித் தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்திஆனிடை அஞ்சுங் கொண்டே அன்பினால் அமர வாட்டிவானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மைநானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.
சொற்பிரிப்பு
தேனுடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்திஆன் இடை அஞ்சும் கொண்டே அன்பினால் அமர ஆட்டிவானிடை மதியம் சூடும் வலம்புரத்து அடிகள் தம்மைநான் அடைந்து ஏத்தப் பெற்று நல்வினைப் பயன் உற்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முளைஎயிற் றிளநல் ஏனம் பூண்டுமொய் சடைகள் தாழவளைஎயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப்புளைகய போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடிவளைபயில் இளைய ரேத்தும் வலம்புரத் தடிகள் தாமே.
சொற்பிரிப்பு
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழவளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கிப்புளை கயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியம் சூடிவளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுருளுறு வரையின் மேலாற் றுளங்கிளம் பளிங்கு சிந்தஇருளுறு கதிர்நு ழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள்அருளுறும் அடிய ரெல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்தமருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.
சொற்பிரிப்பு
சுருள் உறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்தஇருள் உறு கதிர் நுழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள்அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்தமருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையி னானேஅனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினால் அமைய வாட்டிப்புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்எனக்குநான் செய்வ தென்னே இனிவலம் புரவ னீரே.
சொற்பிரிப்பு
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்ட புன் சடையினானேஅனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டிப்புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்றுகொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம்மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.
சொற்பிரிப்பு
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழம் இனிய நாடித்தங்கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்றுகொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி அழுங்கினார் அம்மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அருகெலாங் குவளை செந்நெல் அகவிலை யாம்பல் நெய்தல்தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாங்குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்திமருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.
சொற்பிரிப்பு
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல்தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம்குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்திமருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான்திருவரை யனைய பூமேல் திசைமுக னவனுங் காணான்ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்துஅருமையில் எளிமை யானார் அவர்வலம் புரவ னாரே.
சொற்பிரிப்பு
கருவரை அனைய மேனிக் கடல்வண்ணன் அவனும் காணான்திருவரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான்ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்துஅருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னைஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக்கீ ழன்றுதோளொடு பத்து வாயுந் தொலைந்துடன் அழுந்த வூன்றிஆண்மையும் வலியுந் தீர்ப்பார் அவர்வலம் புரவ னாரே.
சொற்பிரிப்பு
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னைஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ் அன்றுதோளொடு பத்து வாயும் தொலைந்துடன் அழுந்த ஊன்றிஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.