திருமுறை 4 · 4.054 · 10

திருப்புகலூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
புகலூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீ றாகி வீழப்புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலேன் உடலந் தன்னுள்அகைத்திட்டங் கதனை நாளும் ஐவர்கொண் டாட்ட வாடித்திகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழப்புகைத்திட்ட தேவர் கோவே பொறி இலேன் உடலம் தன்னுள்அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர்கொண்டு ஆட்ட ஆடித்திகைத்திட்டேன் செய்வது என்னே திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையிற் பட்டுக்கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்ஐநெரிந் தகமி டற்றே அடைக்கும்போ தாவி யார்தாஞ்செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும்போது ஆவியார் தாம்செய்வது ஒன்று அறிய மாட்டேன் திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பைஅப்பர்போல் ஐவர் வந்து அதுதரு கிதுவி டென்றுஒப்பவே நலிய லுற்றால் உய்யுமா றறிய மாட்டேன்செப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பைஅப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்றுஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்செப்பமே திகழும் மேனித் திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொறியிலா அழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணிநெறியலா நெறிகள் சென்றேன் நீதனேன் நீதி யேதும்அறிவிலேன் அமரர் கோவே அமுதினை மனனில் வைக்குஞ்செறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
பொறி இலா அழுக்கை ஓம்பிப் பொய்யினை மெய் என்று எண்ணிநெறி அலா நெறிகள் சென்றேன் நீதனேன் நீதி ஏதும்அறிவிலேன் அமரர் கோவே அமுதினை மனனில் வைக்கும்செறிவு இலேன் செய்வது என்னே திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அளியினார் குழலி னார்கள் அவர்களுக் கன்ப தாகிக்களியினார் பாடல் ஓவாக் கடவூர்வீ ரட்ட மென்னுந்தளியினார் பாத நாளும் நினைவிலாத் தகவில் நெஞ்சந்தெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகிக்களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவில் நெஞ்சம்தெளிவு இலேன் செய்வது என்னே திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

இலவினார் மாதர் பாலே இசைந்துநான் இருந்து பின்னும்நிலவுநாள் பலவென் றெண்ணி நீதனேன் ஆதி உன்னைஉலவிநான் உள்க மாட்டேன் உன்னடி பரவு ஞானஞ்செலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
இலவினார் மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னைஉலவி நான் உள்க மாட்டேன் உன் அடி பரவும் ஞானம்செலவு இலேன் செய்வது என்னே திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காத்திலேன் இரண்டும் மூன்றுங் கல்வியேல் இல்லை என்பால்வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயே னல்லேன்பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
காத்திலேன் இரண்டும் மூன்றும் கல்வியேல் இல்லை என்பால்வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயேன் அல்லேன்பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே பரவுவார்கள்தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகிஏருடைக் கதிர்க ளாகி இமையவர் இறைஞ்ச நின்றுஆய்வதற் கரிய ராகி அங்கங்கே யாடு கின்றதேவர்க்குந் தேவ ராவார் திருப்புக லூர னாரே.
சொற்பிரிப்பு
நீருமாய்த், தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகிஏர் உடைக் கதிர்களாகி இமையவர் இறைஞ்ச நின்றுஆய்வதற்கு அரியர் ஆகி அங்குஅங்கே ஆடுகின்றதேவர்க்கும் தேவர் ஆவார் திருப்புகலூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டிஉய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.
சொற்பிரிப்பு
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயரத் தூண்டிஉய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்செய்வது ஒன்று அறிய மாட்டேன் திருப்புகலூரனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அருவரை தாங்கி னானும் அருமறை யாதி யானும்இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்கருவரை எடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்திருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே.
சொற்பிரிப்பு
அருவரை தாங்கினானும் அருமறை ஆதியானும்இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்கருவரை எடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்திருவிரல் சிறிது வைத்தார் திருப்புகலூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.