திருமுறை 4 · 4.053 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்கழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளாரஅழல்வலங் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்தொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே.
சொற்பிரிப்பு
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோலவேல் கண்ணி தன்னைக்கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள் அக் கணங்கள் ஆரஅழல் வலம் கொண்ட கையான் அருள்கதிர் எறிக்கும் ஆரூர்தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை யென்றுவேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சிஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே.
சொற்பிரிப்பு
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்றுவேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சிஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்அழுதகம் புகுந்து நின்றார் அவரவர் போலும் ஆரூர்எழிலக நடுவெண் முத்த மன்றியும் ஏர்கொள் வேலிப்பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.
சொற்பிரிப்பு
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்அழுதகம் புகுந்து நின்றார் அவர்அவர் போலும் ஆரூர்எழில் அகம் நடுவெண் முற்றம் அன்றியும் ஏர்கொள் வேலிப்பொழில் அகம் விளங்கு திங்கள் புதுமுகிழ் சூடினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகையிருள் ஈமக் கங்குல்வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலும் மூவாவெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளிநா ராச மன்னஅஞ்சுடர் அணிவெண் டிங்கள் அணியும்ஆ ரூர னாரே.
சொற்பிரிப்பு
நஞ்சு இருள் மணிகொள் கண்டர் நகை இருள் ஈமக் கங்குல்வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவாவெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்னஅஞ்சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப்பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத்தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும்அந்தளிர் ஆகம் போலும் வடிவர்ஆ ரூர னாரே.
சொற்பிரிப்பு
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்தப்பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப்பட்டுத்தஞ்சடைத் தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும்அந்தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித்தானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்ஊனகங் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்ஆனகம் அஞ்சும் ஆடும் அடிகள்ஆ ரூர னாரே.
சொற்பிரிப்பு
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்ஆன் அகம் அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அஞ்சணை கணையி னானை அழலுற அன்று நோக்கிஅஞ்சணை குழலி னாளை அமுதமா அணைந்து நக்குஅஞ்சணை அஞ்சும் ஆடி ஆடர வாட்டு வார்தாம்அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித் திடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கிஅஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்குஅஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார் தாம்அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வணங்கிமுன் அமரர் ஏத்த வல்வினை யான தீரப்பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடிஅணங்கொடி மாட வீதி ஆரூரெம் அடிக ளாரே.
சொற்பிரிப்பு
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப்பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை அண்ணல்,மணம் கமழ் ஓதி பாகர் மதிநிலா வட்டத்து ஆடிஅண் அம்கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்கள் தங்கள்புகலிட மாகி வாழும் புகலிலி இருவர் கூடிஇகலிட மாக நீண்டங் கீண்டெழில் அழல தாகிஅகலிடம் பரவி யேத்த அடிகள்ஆ ரூர னாரே.
சொற்பிரிப்பு
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான் மறையோர்கள் தங்கள்புகலிடம் ஆகி வாழும் புகல் இலி இருவர் கூடிஇகலிடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகிஅகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆயிரந் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கிஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவஆயிரந் தோளும் மட்டித் தாடிய அசைவு தீரஆயிரம் அடியும் வைத்த அடிகள்ஆ ரூர னாரே.
சொற்பிரிப்பு
ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கிஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவஆயிரந் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீரஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.