திருமுறை 4 · 4.052 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற்கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்க ளோடும்அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
படுகுழிப் பவ்வத்துஅன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்கெடுவது இம் மனிதர் வாழ்க்கை காண்தொறும் கேதுகின்றேன்முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரேல் இவர்களோடும்அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடிஒழுக்கறா ஒன்ப துவாய் ஒற்றுமை யொன்று மில்லைசழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்யஅழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடிஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லைசழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்யஅழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்கள் நின்றுநெஞ்சில்நோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார்நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்ப னேநான்அஞ்சினேற் கஞ்ச லென்னீர் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்றுநெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியில் நூக்கக்கண்டுநான் தரிக்க கில்லேன் காத்துக்கொள் கறைசேர் கண்டாஅண்டவா னவர்கள் போற்றும் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்குண்டராய்த் திரிதந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக்கண்டு நான் தரிக்க கில்லேன் காத்துக் கொள் கறைசேர் கண்டாஅண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்ச மென்றுஏழையே னாகி நாளும் என்செய்கேன் எந்தை பெம்மான்வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்துஆழ்குழிப் படுக்க வாற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்றுஏழையேன் ஆகி நாளும் என் செய்கேன் எந்தை பெம்மான்வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்துஆழ்குழிப் படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமைசீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக்கூற்றம்போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்யஆற்றவுங் கில்லேன் நாயேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
மாற்றம் ஒன்று அருள கில்லீர் மதி இலேன் விதி இலாமைசீற்றமும் தீர்த்தல் செய்யீர் சிக்கனவு உடையர் ஆகிக்கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்யஆற்றவும் கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழி யாகத்துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப்பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து மிக்கஅயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
உயிர் நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆகத்துயரமே ஏற்றம் ஆகத் துன்பக்கோல் அதனைப் பற்றிப்பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்கு நீர் இறைத்து மிக்கஅயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கற்றதேல் ஒன்று மில்லை காரிகை யாரோ டாடிப்பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலேமுற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரஞ் செய்யஅற்றுநான் அலந்து போனேன் ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
கற்றதேல் ஒன்றும் இல்லைக் காரிகையாரோடு ஆடிப்பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலேமுற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்யஅற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்துசித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்யமத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்துசித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்யமத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் தானும்அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றிஎடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூத மெல்லாம்முடித்தலை பத்துந் தோளும் முறிதர இறையே யூன்றிஅடர்த்தருள் செய்த தென்னே ஆரூர்மூ லட்ட னீரே.
சொற்பிரிப்பு
தடக்கை நால் ஐந்தும் கொண்டு தடவரை தன்னைப் பற்றிஎடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்முடித்தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றிஅடர்த்து அருள் செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.