திருமுறை 4 · 4.051 · 10

திருக்கோடிகா

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கோடிகா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானேகற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானேசெற்றவர் புரங்கள் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானேகுற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
நெற்றிமேல் கண்ணினானே நீறு மெய் பூசினானேகற்றைப் புன் சடையினானே கடல் விடம் பருகினானேசெற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானேகுற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானேவடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானேஅடியிணை பரவ நாளும் அடியவர்க் கருள்செய் வானேகொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
கடிகமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானேவடிவுடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானேஅடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானேகொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீறுமெய் பூசி னானே நிழல்திகழ் மழுவி னானேஏறுகந் தேறி னானே இருங்கடல் அமுதொப் பானேஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளி னானேகூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானேஏறு உகந்து ஏறினானே இருங்கடல் அமுது ஒப்பானேஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானேகூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானேநீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவேஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங்கோலமார் சடையி னானே கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
காலனைக் காலால் செற்று அன்று அருள்புரி கருணையானேநீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர் கோவேஞாலமாம் பெருமையானே நளிர் இளந் திங்கள் சூடும்கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பூணர வாரத் தானே புலியுரி அரையி னானேகாணில்வெண் கோவ ணமுங் கையிலோர் கபால மேந்திஊணுமூர்ப் பிச்சை யானே உமையொரு பாகத் தானேகோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானேகாணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்திஊணும் ஊர்ப் பிச்சையானே உமை ஒரு பாகத்தானேகோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானேஏழையேன் ஏழை யேன்நான் என்செய்கேன் எந்தை பெம்மான்மாழையொண் கண்ணி னார்கள் வலைதனில் மயங்கு கின்றேன்கூழைஏ றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானேஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான்மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அழலுமிழ் அங்கை யானே அரிவையோர் பாகத் தானேதழலுமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனிற் பலிகொள் வானேநிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள்குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர் பாகத்தானேதழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனில் பலி கொள்வானேநிழல் உமிழ் சோலை சூழ நீள்வரி வண்டு இனங்கள்குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏவடு சிலையி னாலே புரமவை எரிசெய் தானேமாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத் தானேஆவடு துறையு ளானே ஐவரால் ஆட்டப் பட்டேன்கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானேமாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானேஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏற்றநீர்க் கங்கை யானே இருநிலந் தாவி னானும்நாற்றமா மலர்மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடிஆற்றலால் அளக்க லுற்றார்க் கழலுரு வாயினானேகூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
ஏற்ற நீர்க் கங்கையானே இருநிலம் தாவினானும்நாற்ற மாமலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடிஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானேகூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பழகநான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசாமழகளி யானை யின்றோல் மலைமகள் வெருவப் போர்த்தஅழகனே அரக்கன் திண்டோ ள் அருவரை நெரிய வூன்றுங்குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.
சொற்பிரிப்பு
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசாமழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்தஅழகனே அரக்கன் திண்தோள் அருவரை நெரிய ஊன்றும்குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.