1
நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ளஅடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந்துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நெடியமால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ளஅடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்கொடி நெடுந் தேர் கொடுத்தார் குறுக்கை வீரட்டனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.