திருமுறை 4 · 4.049 · 10

திருக்குறுக்கை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
குறுக்கை வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்ஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார்சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்கோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார் அடி இணைக்கீழ்ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்சோதியுள் சுடராய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார் பல் பூக்கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்துஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்தகூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்துஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்தகூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பிஅழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டுபிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பிஅழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்துகொண்டு ஆட்டக் கண்டுபிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்துஉலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்துஉலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டுஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
ஏறுடன் ஏழ்அ டர்த்தான் எண்ணி ஆயிரம் பூக் கொண்டுஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்வேறும் ஓர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்எல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக்கொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந்தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்தீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண்கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சிப் பாரம்தோல் பெருஞ் செருப்புத் தொட்டுத் தூய வாய்க் கலசம் ஆட்டித்தீப்பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்டநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங்குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்டநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்திவணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்தகணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதி மூர்த்திவணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்தகணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும்குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னைஅடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்துவிடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர் மன்னன் தன்னைஅடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்துவிடுத்தனன் கை நரம்பால் வேதகீதங்கள் பாடக்கொடுத்தனர் கொற்ற வாள் நாள் குறுக்கை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.