1
கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும்உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்றுதடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகிமடலவிழ் கொன்றை சூடி மன்னும்ஆப் பாடி யாரே.
சொற்பிரிப்பு
கடல் அகம் ஏழினோடும் புவனமும் கலந்து விண்ணும்உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்றுதடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகிமடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.