1
கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்சஅனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான்மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
சொற்பிரிப்பு
கனக மா வயிரம் உந்தும் மாமணிக் கயிலை கண்டும்உனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்சஅனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.