திருமுறை 4 · 4.044 · 10

திருஏகம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளேகம்பனைக் கதிர்வெண் திங்கட் செஞ்சடைக் கடவுள் தன்னைச்செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.
சொற்பிரிப்பு
நம்பனை நகரம் மூன்றும் எரி உண வெருவ நோக்கும்அம்பனை அமுதை ஆற்றை அணிபொழில் கச்சியுள்ஏகம்பனைக் கதிர் வெண் திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னைச்செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய்அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்துபெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே.
சொற்பிரிப்பு
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய்அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்துபெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்சிலையினால் மதில்கள் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத்தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.
சொற்பிரிப்பு
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரைத்தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்துஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரைவாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.
சொற்பிரிப்பு
பூத்த பொன் கொன்றை மாலை புரிசடைக்கு அணிந்த செல்வர்தீர்த்தமாம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்துஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரைவாழ்த்தும் ஆறு அறிய மாட்டேன் மால் கொடு மயங்கினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக்கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.
சொற்பிரிப்பு
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகிக்கையில் ஓர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள்வார் தாம்எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரைக்கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்லஉருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே.
சொற்பிரிப்பு
தருவினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள்அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும்திருவினைத் திரு ஏகம்பம் செப்பிட உறைய வல்லஉருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் றன்னைக்கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.
சொற்பிரிப்பு
கொண்டது ஓர் கோலமாகிக் கோலக்கா உடைய கூத்தன்உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னைக்கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்மஇடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன்நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
படம் உடை அரவினோடு பனிமதி அதனைச் சூடிக்கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்மஇடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்நன்றியிற் புகுந்தெ னுள்ளம் மெள்ளவே நவில நின்றுகுன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் எம்மைஇன்றுயில் போது கண்டார் இனியர்ஏ கம்ப னாரே.
சொற்பிரிப்பு
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்றுகுன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர் எம்மைஇன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்தஅருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தேஎருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்குவருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.
சொற்பிரிப்பு
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்தஅருத்தியால் அன்பு செய்வார் அவர்அவர்க்கு அருள்கள் செய்தேஎருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்குவருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.