திருமுறை 4 · 4.043 · 10

திருக்கச்சிமேற்றளி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கச்சி மேற்றளி (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்தன் னோடுங்கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
மறையது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்பிறையது சடைமுடி மேல் பெய்வளையாள் தன்னோடும்கறையது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர் தன்னுள்ளால்இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏலநற் கடம்பன் தாதை இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும்பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்காலனைக் காலால் செற்றார் காஞ்சி மா நகர் தன்னுள்ளால்ஏல நல் கடம்பன் தாதை இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
விண்இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்தப்பண்இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார்கண்இடை மணியின் ஒப்பார் காஞ்சிமா நகர் தன்னுள்ளால்எண்இடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்வாமனை வானவர்கள் வலம்கொடு வந்து போற்றக்காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர் தன்னுள்ளால்ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்தகானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏனமக் கோடு பூண்டார் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகித்தானவர் தனமும் ஆகித் தனஞ்சயனோடு எதிர்ந்தகானவர் காள கண்டர் காஞ்சிமா நகர் தன்னுள்ளால்ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்றகாயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
மாயனாய் மாலனாகி மலரவனாகி மண்ணாய்த்தேயமாய்த் திசை எட்டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்றகாயமாய்க் காயத்து உள்ளார் காஞ்சிமா நகர் தன்னுள்ளால்ஏய மென் தோளி பாகர் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எண்ணினை யெண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர் தன்னுள்ளால்எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சிமா நகர் தன்னுள்ளால்எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார்ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்ஏறினை யேறு மெந்தை இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார்ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழில் கச்சி தன்னுள்ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டுமன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
சொற்பிரிப்பு
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டுமன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால்கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்இன்னவற்கு அருளிச் செய்தார் இலங்கு மேற்றளியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.