திருமுறை 4 · 4.042 · 10

திருத்துருத்தி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டாஇருத்தியெப் பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து மின்கள்ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையில் வைத்ததுருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டாஇருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்ததுருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்றஇவையொரு பொருளு மல்ல இறைவனை ஏத்து மின்னோஅவைபுர மூன்றும் எய்தும் அடியவர்க் கருளிச் செய்தசுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றஇவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்துமின்னோஅவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்தசுவையினைத், துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உன்னியெப் போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மின்னோகன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றுந்துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோகன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஊன்றலை வலிய னாகி உலகத்துள் உயிர்கட் கெல்லாந்தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழவான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னுந்தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
ஊன் தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்தான் தலைப்பட்டு நின்று சார் கனல் அகத்து வீழவான்தலைத் தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும்தோன்றலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உடல்தனைக் கழிக்க லுற்ற உலகத்துள் உயிர்கட் கெல்லாம்இடர்தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மின்னோகடல்தனில் நஞ்ச முண்டு காண்பரி தாகி நின்றசுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்துமின்னோகடல்தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்றசுடர்தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமி னீர்கள்பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்தவள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்றதுள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்பொள்ளல் இக் காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்தவள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்றதுள்அலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்சாதி ஆம் சதுர்முகனும் சக்கரத்தானும் காணாச்சோதியைத், துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டாதூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோசோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டுந்தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டாதூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமின்னோசோமனைச் சடையுள் வைத்துத் தொல்நெறி பலவும் காட்டும்தூமணல் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்றுகண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க் கருள்கள் செய்ததொண்டர்கள் துணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்றுகண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின் நீர்கள்விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்ததொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்அண்டத்தைக் கழிய நீண்ட அடலரக் கன்றன் ஆண்மைகண்டொத்துக் கால்வி ரலால் ஊன்றிமீண் டருளிச் செய்ததுண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்றுமின்கள்அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மைகண்டு ஒத்துக் கால் விரலால் ஊன்றி மீண்டு அருளிச் செய்ததுண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.