திருமுறை 4 · 4.041 · 10

திருச்சோற்றுத்துறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
சோற்றுத்துறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கிமெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவாஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கிமெய் விராம் மனத்தன் அல்லேன் வேதியா வேத நாவாஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்செய்வரால் உகளும் செம்மைத் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டாஎட்டவாங் கைகள் வீசி எல்லிநின் றாடு வானைஅட்டமா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டாஎட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானைஅட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச்சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலேஎல்லியும் பகலு முள்ளே ஏகாந்த மாக ஏத்தும்பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலேஎல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்பல் இல் வெண் தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்சொல்லும் நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.
சொற்பிரிப்பு
கறையராய்க் கண்டம் நெற்றிக் கண்ணராய்ப் பெண் ஓர் பாகம்இறையராய் இனியர் ஆகித் தனியராய்ப் பனி வெண் திங்கள்பிறையராய்ச் செய்த எல்லாம் பீடராய்க் கேடு இல் சோற்றுத்துறையராய்ப் புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்எந்தையே ஏக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்றுசிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்எந்தையே ஏக மூர்த்தி என்று நின்று ஏத்த மாட்டேன்பந்தம் ஆய் வீடும் ஆகிப் பரம்பரம் ஆகி நின்றுசிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமேஆர்த்துவந் திழிவ தொத்த அலைபுனற் கங்கை யேற்றுத்தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திறமேஆர்த்து வந்து இழிவது ஒத்த அலைபுனல் கங்கை ஏற்றுத்தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போனஎந்தையெம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தா தந்தோமுந்தரா அல்கு லாளை யுடன்வைத்த ஆதி மூர்த்திசெந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போனஎந்தை எம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோமுந்து அரா அல்குலாளை உடன் வைத்த ஆதி மூர்த்திசெந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அங்கதி ரோன வனை அண்ணலாக் கருத வேண்டாவெங்கதி ரோன் வழியே போவதற் கமைந்து கொண்மின்அங்கதி ரோன வனை யுடன்வைத்த ஆதி மூர்த்திசெங்கதி ரோன்வ ணங்குஞ் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டாவெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொண்மின்அங்கதிரோன் அவனை உடன் வைத்த ஆதி மூர்த்திசெங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் றன்னைநீதியால் நினைய மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன் தன்னைநீதியால் நினைக்க மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணாச்சோதி ஆய்ச் சுடர் அது ஆனார் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டிற்பெற்றதோர் உபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலைஎ டுக்கச்செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
சொற்பிரிப்பு
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்றுமின்கள்கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்கச்செற்று உகந்து அருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.