1
தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லைகானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்குவானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும்ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே.
சொற்பிரிப்பு
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லைகான் அலாது ஆடல் இல்லை கருதுவார் தங்களுக்குவான் அலாது அருளும் இல்லை வார்குழல் மங்கையோடும்ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.