திருமுறை 4 · 4.039 · 10

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்றஅண்டனே அமரர் ஏறே திருவையா றமர்ந்த தேனேதொண்டனேன் தொழுதுன் பாதஞ் சொல்லிநான் திரிகின் றேனே.
சொற்பிரிப்பு
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி ஆகி நின்றஅண்டனே அமரர் ஏறே திருஐயாறு அமர்ந்த தேனேதொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பீலிகை இடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணிவாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னேவாலியார் வணங்கி ஏத்துந் திருவையா றமர்ந்த தேனோடாலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த வாறே.
சொற்பிரிப்பு
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணிவாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னேவாலியார் வணங்கி ஏத்தும் திருஐயாறு அமர்ந்த தேனோடுஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் தவமென் றெண்ணிஒட்டிடு மனத்தி னீரே உம்மையான் செய்வ தென்னேமொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோடொட்டிடும் உள்ளத் தீரே உம்மைநான் உகந்திட் டேனே.
சொற்பிரிப்பு
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணிஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னேமொட்டு இடு கமலப் பொய்கைத் திருஐயாறு அமர்ந்த தேனோடுஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடுநேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனைவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.
சொற்பிரிப்பு
பாசிப்பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடுநேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறிய மாட்டேன்தேசத்தார் பரவி ஏத்தும் திருஐயாறு அமர்ந்த தேனைவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணிவடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலி பட்ட தென்னேமடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனைஅடுத்துநின் றுன்னு நெஞ்சே அருந்தவஞ் செய்த வாறே.
சொற்பிரிப்பு
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணிவடுக்களோடு இசைந்த நெஞ்சே மதி இலி பட்டது என்னேமடுக்களில் வாளை பாயும் திருஐயாறு அமர்ந்த தேனைஅடுத்து நின்று உன்னு நெஞ்சே அருந்தவம் செய்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்துஉறவினால் அமண ரோடும் உணர்விலேன் உணர்வொன் றின்றிநறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனைமறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.
சொற்பிரிப்பு
துறவி என்று அவம் அது ஓரேன் சொல்லிய செலவு செய்துஉறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றிநறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திருஐயாறு அமர்ந்த தேனைமறவு இலா நெஞ்சமே நல் மதி உனக்கு அடைந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாஞ்சொல்லிய செலவு செய்தேன் சோர்வனான் நினைந்த போதுமல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனைஎல்லியும் பகலு மெல்லாம் நினைந்தபோ தினிய வாறே.
சொற்பிரிப்பு
பல் உரைச் சமண ரோடே பலபல காலம் எல்லாம்சொல்லிய செலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்த போதுமல்லிகை மலரும் சோலைத் திருஐயாறு அமர்ந்த தேனைஎல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனியவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போகஎண்ணிலாச் சமண ரோடே இசைந்தனை ஏழை நெஞ்சேதெண்ணிலா எறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக்கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.
சொற்பிரிப்பு
மண்உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போகஎண் இலாச் சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சேதெண்நிலா எறிக்கும் சென்னித் திருஐயாறு அமர்ந்த தேனைக்கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந்திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.
சொற்பிரிப்பு
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும்திருந்து நல் திருவடியும் திருமுடி காண மாட்டார்அருந்தவ முனிவர் ஏத்தும் திருஐயாறு அமர்ந்த தேனைப்பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அறிவிலா அரக்க னோடி அருவரை எடுக்க லுற்றுமுறுகினான் முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கிநிறுவினான் சிறுவி ரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழஅறிவினால் அருள்கள் செய்தான் திருவையா றமர்ந்த தேனே.
சொற்பிரிப்பு
அறிவு இலா அரக்கன் ஓடி அருவரை எடுக்கல் உற்றுமுறுகினான் முறுகக் கண்டு மூதறிவாளன் நோக்கிநிறுவினான் சிறு விரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழஅறிவினால் அருள்கள் செய்தான் திருஐயாறு அமர்ந்த தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.