திருமுறை 4 · 4.038 · 10

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்அங்கையுள் அனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
பொடிதனைப் பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார்கடியது ஓர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்வடிவுஉடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்அடைதர அருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்இண்டையைத் திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார்வண்டுசேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்கான் இடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்ஆன் இடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார்வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய்ப் பூச வைத்தார்வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழில் அனைத்தும் வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்அத்தியின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய்விடை ஏற வைத்தார்சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார்முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார்நாறு பூங்கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலித்தோலும் வைத்தார்ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார்கீதங்கள் பாட வைத்தார் கின்னரம் தன்னை வைத்தார்பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
சொற்பிரிப்பு
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.