திருமுறை 4 · 4.037 · 10

திருநெய்த்தானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
நெய்த்தானம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்றகோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேயநீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
சொற்பிரிப்பு
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்மேலவாய் இருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்றகோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேயநீலம் வைத்தனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காமனை யன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கித்தூபமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்துசேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயில் மேயவாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.
சொற்பிரிப்பு
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கித்தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்துசேம நெய்த்தானம் என்னும் செறிபொழில் கோயில் மேயவாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னைஉறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி யாயநிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்றுகுறைதரும் அடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.
சொற்பிரிப்பு
பிறைதரு சடையின் மேலே பெய்புனல் கங்கை தன்னைஉறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆயநிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்றுகுறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தானம் மேவிஅடிதரு கழல்கள் ஆர்ப்ப ஆடுமெம் அண்ண லாரே.
சொற்பிரிப்பு
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார்சடை மதியம் வைத்துப்பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்நெடிதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவிஅடிதரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லிஆடிய கழலர் சீரார் அந்தண்நெய்த் தானம் என்றுங்கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.
சொற்பிரிப்பு
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்திப்பாடிய பூதம் சூழப் பண்ணுடன் பலவும் சொல்லிஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வானவர் வணங்கி யேத்தி வைகலும் மலர்கள் தூவத்தானவர்க் கருள்கள் செய்யும் சங்கரன் செங்கண் ஏற்றன்தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தானம் மேயகூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.
சொற்பிரிப்பு
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவத்தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன் செங்கண் ஏற்றன்தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேயகூன் இள மதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காலதிற் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசிஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்றமேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாயமாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.
சொற்பிரிப்பு
கால் அதில் கழல்கள் ஆர்ப்பக் கனல்-எரி கையில் வீசிஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்றமேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாயமால் ஒரு பாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்துஅந்திப்போ தனலு மாடி அடிகள்ஐ யாறு புக்கார்வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.
சொற்பிரிப்பு
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்துஅந்திப்போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார்வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார்சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசிஓதிவா யுலகம் ஏத்த உகந்துதாம் அருள்கள் செய்வார்ஆதியாய் அந்த மானார் யாவரும் இறைஞ்சி யேத்தநீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.
சொற்பிரிப்பு
சோதியாய்ச் சுடரும் ஆனார் சுண்ணவெண் சாந்து பூசிஓதிவாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள் செய்வார்ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்தநீதியாய் நியமம்ஆகி நின்ற நெய்த்தானனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இலையுடைப் படைகை யேந்தும் இலங்கையர் மன்னன் றன்னைத்தலையுடன் அடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்துசிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்றநிலையுடை யடிகள் போலும் நின்றநெய்த் தான னாரே.
சொற்பிரிப்பு
இலை உடைப் படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள் செய்துசிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்றநிலையுடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.