1
காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல்பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பிற்தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்தஏடுடைக் கமல வேலி இடைமரு திடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
காடுடைச் சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல்பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்தோடுடைக் கைதை யோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்தஏடுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.