திருமுறை 4 · 4.033 · 10

திருமறைக்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்றசுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலுஞ்சந்திர னோடுங் கங்கை அரவையுஞ் சடையுள் வைத்துமந்திர மானார் போலும் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்றசுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும்சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்துமந்திரம் ஆனார் போலும் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும்பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்மாயன நாடர் போலும் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
தேயன நாடர் ஆகித் தேவர்கள் தேவர் போலும்பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்காயன நாடு கண்டம் கதன்உளார் காள கண்டர்மாயன நாடர் போலும் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்றுவெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவு ணாதேசிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்துமறுமையும் இம்மை யாவார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று,வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதேசிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்துமறுமையும் இம்மை ஆவார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்துதோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணிமால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
கால் கொடுத்து இரு கை ஏற்றிக் கழி நிரைத்து இறைச்சி மேய்ந்துதோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல்ஏல் உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணிமால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற எந்தைமண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓதப்பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்கண்ணினார் கண்ணின் உள்ளே சோதியாய் நின்ற எந்தைமண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார்திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்ஏதராய் நட்ட மாடி இட்டமாய்க் கங்கை யோடுமாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
கீதராய்க் கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்;வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய்க் கங்கையோடுமாதை ஓர் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கனத்தினார் வலி யுடைய கடிமதில் அரணம் மூன்றுஞ்சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலுந்தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்குமனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
கனத்தின்ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்சினத்தினுள் சினமாய் நின்று தீ எழச் செற்றார் போலும்தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்குமனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்காசினைக் கனலை என்றுங் கருத்தினில் வைத்த வர்க்குமாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
தேசனைத் தேசன் தன்னைத் தேவர்கள் போற்று இசைப்பார்வாசனை செய்து நின்று வைகலும் வணங்குமின்கள்காசினைக் கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்குமாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டிற்பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலேதுணிவுடை அரக்க னோடி எடுத்தலுந் தோகை அஞ்சமணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலேதுணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்சமணி முடிப் பத்து இறுத்தார் மாமறைக் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.