1
உரித்திட்டார் ஆனை யின்றோல் உதிரவா றொழுகி யோடவிரித்திட்டார் உமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.
சொற்பிரிப்பு
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓடவிரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும்சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.