திருமுறை 4 · 4.031 · 10

திருக்கடவூர் வீரட்டம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கடவூர் வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பொள்ளத்த காயம் மாயப் பொருளினைப் போக மாதர்வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க் கென்றுங்கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்து நீர் மையல் எய்தில்விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்கண்ணிடை மணியர் போலும் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பொருத்திய குரம்பை தன்னுட் பொய்நடை செலுத்து கின்றீர்ஒருத்தனை யுணர மாட்டீர் உள்ளத்திற் கொடுமை நீக்கீர்வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்கருத்தினில் இருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பொருத்திய குரம்பை தன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீர்ஒருத்தனை உணர மாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர்வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்கருத்தினில் இருப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகிஅரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்துவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகிஅரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்துவிரும்பி, நல் விளக்குத், தூபம் விதியினால் இட வல்லார்க்குக்கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றிவிலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்துகலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும்இன்றிவிலக்குவார் இலாமை யாலே விளக்கத்தில் கோழி போன்றேன்மலக்குவார் மனத்தின் உள்ளே காலனார் தமர்கள் வந்துகலக்க நான் கலங்குகின்றேன் கடவூர் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்துவழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்துவழியிடை வாழ மாட்டேன் மாயமும் தெளிய கில்லேன்அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப்பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீநேயத்தால் நினைய மாட்டேன் நீதனே னீசனேன் நான்காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
மாயத்தை அறிய மாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகிப்பேய் ஒத்துக், கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீநேயத்தால் நினைய மாட்டேன் நீதனேன் நீசனேன் நான்காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்எற்றுளேன் என்செய் கேன்நான் இடும்பையால் ஞான மேதுங்கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும்கற்றிலேன் களைகண் காணேன் கடவூர் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சேலின்நேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்பாலுநற் றயிர்நெய் யோடு பலபல ஆட்டி யென்றும்மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்றுகாலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டுச் சிவனுக்கு அன்பாய்ப்பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும்மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்றுகாலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

முந்துரு இருவ ரோடு மூவரு மாயி னாரும்இந்திர னோடு தேவர் இருடிகள் இன்பஞ் செய்யவந்திரு பதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்யவந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.