திருமுறை 4 · 4.030 · 10

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்ஆமனை யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார்காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார்பெரியன புரங்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார்பரியதீ வண்ண ராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார்கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார்பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையுள் வைத்தார்ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
கூர் இருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்பேர்இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார்விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நவில வைத்தார்கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்விண் தங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்நள்தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே
சொற்பிரிப்பு
ஊனப் பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்ஞானப் பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்வானப் பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டுஎதிர்முக மின்றி நின்ற எரியுரு வதனை வைத்தார்பிதிர்முகன் காலன் றன்னைக் கால்தனிற் பிதிர வைத்தார்கதிர்முகஞ் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
சதுர்முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டுஎதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்பிதிர்முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்கதிர்முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன்வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன்நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக்காலினால் ஊன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
சொற்பிரிப்பு
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழக்,காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.