1
ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகிவானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்தேனும்இன் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
சொற்பிரிப்பு
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகிவானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்தேனும் இன் அமுதும் ஆனார் திருச்செம்பொன் பள்ளியாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.