திருமுறை 4 · 4.028 · 10

திருவதிகைவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்கண்கண இருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்பின்பக லுணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடிக்கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றிப்பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்அன்பனாய் வாழ மாட்டேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சிநிறைப்பெருங் கடலுங் கண்டேன் நீள்வரை யுச்சி கண்டேன்பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா இவைய னைத்தும்அறுப்பதோர் உபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
கறைப் பெருங் கண்டத்தானே காய்கதிர் நமனை அஞ்சிநிறைப் பெருங் கடலைக் கண்டேன் நீள்வரை உச்சி கண்டேன்பிறைப் பெருஞ் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும்அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள்ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின்பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.
சொற்பிரிப்பு
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்ஏதங்கள் அறிய மாட்டார் இணை அடி தொழுதோம் என்பார்ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகை வீரட்டனே நின்பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசிலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்மடலைநீர் கிழிய வோடி அதனிடை மணிகள் சிந்துங்கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.
சொற்பிரிப்பு
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றைப்படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனித் தெங்கின்மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும்கெடில வீரட்டம் மேய கிளர்சடை முடியனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாகஇந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்சிந்திர மாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்துகந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத் தாரே.
சொற்பிரிப்பு
மந்திரம் உள்ளது ஆக மறிகடல் எழு நெய் ஆகஇந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்சிந்திரம் ஆக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்துகந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடிமெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்துகைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்னகின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடிமெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்துகைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்னகின்னரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.