திருமுறை 4 · 4.027 · 10

திருவதிகைவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சாமுடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகம் கச்சாமுடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடைக் கற்றை தன் மேல்தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்அடக்கினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலேஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்குஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலேஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மைநம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார்வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்தஅம்பினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மைநம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்தஅம்பினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ்செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப்பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக்கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
மறிபடக் கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம்செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப்பொறிபடக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கிக்கிறிபட நடப்பர் போலும் கெடில வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்ததெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்வரிவரால் உகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலிஅரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நரிவரால் கவ்வச் சென்று நல்தசை இழந்தது ஒத்ததெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தை செய்வார்வரிவரால் உகளும் தெண்நீர்க் கழனி சூழ் பழன வேலிஅரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின்சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனைஅள்ளலைக் கடப்பித் தாளும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டுபோய்ப் பலாசங் கொம்பின்சுள்ளலைச் சுடலை வெண்நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்றுத்துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனைஅள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர்கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்குங்கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால்ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர்கூறு இட்ட மெய்யர் ஆகிக் கூறினார் ஆறும் நான்கும்கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார்ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்க லாகார்நாணிலார் ஐவ ரோடும் இட்டெனை விரவி வைத்தார்ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
காண் இலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார்ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார்;நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்றுபேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்றுஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்றுபேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்றுஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.