திருமுறை 4 · 4.026 · 10

திருவதிகைவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்திபங்கனே பரம யோகி என்றென்றே பரவி நாளுஞ்செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்அன்பனே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்திபங்கனே பரம யோகி என்று என்றே பரவி நாளும்செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதம் காண்பான்அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழமெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டுங் காண்பான்ஐயநான் அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழமெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்ஐய நான் அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன்ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான்ஆதியே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
நீதியால் வாழ மாட்டேன் நித்தலும் தூயேன் அல்லேன்ஓதியும் உணர மாட்டேன் உன்னை உள் வைக்க மாட்டேன்சோதியே சுடரே உன் தன் தூமலர்ப் பாதம் காண்பான்ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும்பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்இருளுமா மணிகண் டாநின் இணையடி இரண்டுங் காண்பான்அருளுமா றருள வேண்டும் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்றம் என்னும்பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன்இருளும் மா மணிகண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான்அருளும் ஆறு அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆத னேனைஅஞ்சினால் உய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும்அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனைஅஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றிமறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றிமறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்பெறு கயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்துஅறுகயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்துவிழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்துவிழித்திலேன் வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்திஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கேஅன்றினான் அலமந் திட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்திஒன்றினால் உணர மாட்டேன் உன்னை உள் வைக்க மாட்டேன்கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கேஅன்றினான் அலமந்திட்டேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானேபணிவிடா இடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்துணிவிலேன் தூய னல்லேன் தூமலர்ப் பாதங் காண்பான்அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானேபணிவிடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்துணிவு இலேன் தூயன் அல்லேன் தூமலர்ப் பாதம் காண்பான்அணியனாய் அறிய மாட்டேன் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டாஒருவனே எம்பி ரானே உன்திருப் பாதங் கண்பான்அருவனே அருள வேண்டும் அதிகைவீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
திருவினாள் கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும்இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காண மாட்டாஒருவனே எம்பிரானே உன் திருப்பாதம் காண்பான்அருவனே அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.