திருமுறை 4 · 4.025 · 10

திருவதிகைவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்துஉண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறிவிண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டு வார்க்கேஅண்ணியார் பெரிதுஞ் சேயார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
வெண்நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்துஉண்ணிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறிவிண்ணில் ஆர் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கேஅண்ணியார் பெரிதும் சேயார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளங்கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றைசூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீறாடினார் ஆடல் மேவி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பாடினார் மறைகள் நான்கும் பாய்இருள் புகுந்து என் உள்ளம்கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றைசூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர்ச் சுடலை வெண்நீறுஆடினார் ஆடல் மேவி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளேதேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்றஏனைய பலவு மாகி இமையவர் ஏத்த நின்றுஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத்து உள்ளேதேன்ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்றஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்றுஆனையின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்றுவிருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்யவருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்றஅருத்தியார்க் கன்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
துருத்தி ஆம் குரம்பை தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்றுவிருத்தி தான் தருக என்று வேதனை பலவும் செய்யவருத்தியால் வல்லவாறு வந்துவந்து அடைய நின்றஅருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்துத்திஐந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்துஉத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்றுஅத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்துத்தி ஐந்தலைய நாகம் சூழ்சடை முடிமேல் வைத்துஉத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்றுஅத்தியின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சேகரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலேசுரிபுரி விரிகு ழலாள் துடியிடைப் பரவை யல்குல்அரிவையோர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்து நெஞ்சேகரி உரி மூட வல்ல கடவுளைக் காலத்தாலேசுரி புரி விரி குழலாள் துடி இடைப் பரவை அல்குல்அரிவை ஓர் பாகர் போலும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தைசோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீற தாடிஆதியும் ஈறு மானார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நீதியால் நினை செய் நெஞ்சே நிமலனை நித்தம்ஆகப்பாதியாம் உமை தன்னோடும் பாகமாய் நின்ற எந்தைசோதியாய்ச் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடிஆதியும் ஈறும் ஆனார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்துபுல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்வில்லிஐங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்துபுல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காமன் என்னும்வில்லி ஐங் கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்அல்லி அம் பழன வேலி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத் தொருவ னாகும்வென்றஐம் புலன்கள் தம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்நன்றவன் நார ணனும் நான்முகன் நாடிக் காண்குற்றன்றவர்க் கரியர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்வென்ற ஐம் புலன்கள் தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்நல் தவ நாரணனும் நான்முகன் நாடிக் காண்குற்றுஅன்று அவர்க்கு அரியர் போலும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்கிடக்கையால் இடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாயமுடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்தடக்கினார் என்னை யாளும் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர்மணி முடிகள் சாயமுடக்கினார் திருவிரல் தான் முருகு அமர் கோதை பாகத்துஅடக்கினார் என்னை ஆளும் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.