திருமுறை 4 · 4.024 · 10

திருவதிகைவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன்கரும்புகொப் பளித்த இன்சொற் காரிகை பாக மாகச்சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்றஅரும்புகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆகச்சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்றஅரும்பு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடிவம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கிஅம்புகொப் பளிக்க எய்தார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடிவம்பு கொப்பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கிஅம்பு கொப்பளிக்க எய்தார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச்சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தவெண் ணீறு பூசிஉடையுங்கொப் பளித்த நாகம் உள்குவார் உள்ளத் தென்றும்அடையுங்கொப் பளித்த சீரார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்தச்சடையும் கொப்பளித்த திங்கள் சாந்த வெண் நீறு பூசிஉடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும்அடையும் கொப்பளித்த சீரார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்கஇறையுங்கொப் பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றைஅறையுங்கொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்கஇறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றைஅறையும் கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுவொன் றேந்திக்கூறுகொப் பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்ஏறுகொப் பளித்த பாதம் இமையவர் பரவி யேத்தஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்திக்கூறு கொப்பளித்த கோதைக் கோல்வளை மாது ஓர் பாகம்ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்தஆறு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப்பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல்சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாகஅணங்குகொப் பளித்த மேனி அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் பரவி ஏத்தப்பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடைஉடைப் பெருமை அண்ணல்சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரிகுழல் பாகம் ஆகஅணங்கு கொப்பளித்த மேனி அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசிநூலுங்கொப் பளித்த மார்பில் நுண்பொறி யரவஞ் சேர்த்திமாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றைஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
சூலம் கொப்பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசிநூலும் கொப்பளித்த மார்பில் நுண்பொறி அரவம் சேர்த்திமாலும் கொப்பளித்த பாகர் வண்டுபண் பாடும் கொன்றைஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடிமேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாடஆகங்கொப் பளித்த தோளார் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடிமேகம் கொப்பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆடஆகம் கொப்பளித்த தோளார் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்தவிரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்துஇரவுகொப் பளித்த கண்டர் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்அரவுகொப் பளித்த கையர் அதிகைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்தவிரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து,இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்அரவு கொப்பளித்த கையர் அதிகை வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாகவண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
தொண்டை கொப்பளித்த செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்கொண்டை கொப்பளித்த கோதைக் கோல்வளை பாகம் ஆகவண்டு கொப்பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்கெண்டை கொப்பளித்த தெண்நீர்க் கெடில வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.