திருமுறை 4 · 4.023 · 10

கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீஎத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாமுத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்றஅத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.
சொற்பிரிப்பு
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீஎத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டாமுத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்றஅத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்காஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீதிருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேநிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.
சொற்பிரிப்பு
கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பு அன தோளி பங்காஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருஉரு உடைய சோதீதிருத்தம் ஆம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தேநிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளேமாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தேகூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.
சொற்பிரிப்பு
கேட்டிலேன் கிளை பிரியேன் கேட்குமா கேட்டி ஆகில்நாட்டினேன் நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளேமாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தேகூட்டமாம் குவிமுலையாள் கூட நீ ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை அடிமை செய்யஎந்தைநீ அருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னேசெந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தேஅந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.
சொற்பிரிப்பு
சிந்தையைத் திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்யஎந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னேசெந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தேஅந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங்கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலேவண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தேஎண்டிசை யோரு மேத்த இறைவநீ யாடு மாறே.
சொற்பிரிப்பு
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின் தன் பாதம்கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலேவண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தேஎண் திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பார்த்திருந் தடிய னேன்நான் பரவுவன் பாடி யாடிமூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.
சொற்பிரிப்பு
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடிமூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்கூத்தா உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்யஐயநீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்திவையகந் தன்னில் மிக்க மல்குசிற் றம்ப லத்தேபையநின் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.
சொற்பிரிப்பு
பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்யஐய நீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்திவையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தேபைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலேகனைப்பரால் என்செய் கேனோ கறையணி கண்டத் தானேதினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தேஅனைத்துநின் னிலயங் காண்பான் அடியனேன் வந்த வாறே.
சொற்பிரிப்பு
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலேகனைப்பரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானேதினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தேஅனைத்து நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதேவஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீமஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தேஅஞ்சொலாள் காண நின்று அழகநீ யாடு மாறே.
சொற்பிரிப்பு
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதேவஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீமஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தேஅம்சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மண்ணுண்ட மால வனும் மலர்மிசை மன்னி னானும்விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தேபண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.
சொற்பிரிப்பு
மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்விண் உண்ட திருஉருவம் விரும்பினார் காண மாட்டார்திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தேபண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.