திருமுறை 4 · 4.022 · 11

கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னிநஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தேதுஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னிநஞ்சு அடைக் கண்டனாரைக் காணலாம் நறவம் நாறும்மஞ்சு அடைச் சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தேதுஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னிஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம்நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தேநீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்கும் சென்னிஆறனார் ஆறு சூடி ஆயிழையாள் ஓர் பாகம்நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தேநீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்குஞ் சென்னிஉடையனா ருடைத லையில் உண்பதும் பிச்சை யேற்றுக்கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேஅடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்கும் சென்னிஉடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்கடிகொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தேஅடிகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னிமையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்செய்யெரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேகையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிமை அரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்செய் எரித் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தேகை எரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம்நாதனார் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தேகாதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்கும் சென்னிப்பூதனார் பூதம் சூழப் புலி உரி அதளனார் தாம்நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தேகாதில் வெண் குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரம மூர்த்திகாரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேபேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரம மூர்த்திகார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தேபேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்குஞ் சென்னிமதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகும்மதத்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தேகதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
முதல் தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னிமதக் களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணல் ஆகும்மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தேகதத்தது ஓர் அரவம் ஆடக் கனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா எறிக்குஞ் சென்னிஇறைவனார் எம்பி ரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேஅறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணிநிலா எறிக்கும் சென்னிஇறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்சிறைகொள் நீர்த் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தேஅறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா எறிக்குஞ் சென்னிநிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக்கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேஅருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
விருத்தனாய்ப் பாலன் ஆகி விரிநிலா எறிக்கும் சென்னிநிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழக்கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தேஅருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்குஞ் சென்னிகாலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறிஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தேநீலஞ்சேர் கண்ட னார்தாம் நீண்டெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
பாலனாய் விருத்தன் ஆகிப் பனிநிலா எறிக்கும் சென்னிகாலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறிஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தேநீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மதியிலா அரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கிநெதியன்றோள் நெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்தமதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தேஅதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
சொற்பிரிப்பு
மதி இலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கிநெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்தமதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தேஅதிசயம் போல நின்று அனல் எரி ஆடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.