1
காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடிபூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதிதீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
சொற்பிரிப்பு
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடிபூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம்மதிதீண்டி வந்து உலவும் திருஆரூர் அம்மானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.