திருமுறை 4 · 4.019 · 11

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
சீகாமரம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சூலப் படையானைச் சூழாக வீழருவிக்கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காயஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
சூலப் படையானைச் சூழ் ஆக வீழ் அருவிக்கோலத்தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானைப்பால் ஒத்த மென் மொழியாள் பங்கனைப் பாங்கு ஆயஆலத்தின் கீழானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோடக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்புக்க ஊர்ப் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய்க்கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடுஅக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சேய உலகமுஞ் செல்சார்வு மானானைமாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனைவேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
சேய உலகமும் செல் சார்வும் ஆனானைமாயப் போர் வல்லானை மாலை தாழ் மார்பனைவேய் ஒத்த தோளியர் தம் மென்முலை மேல் தண் சாந்தின்ஆயத்து இடையானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படரமாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்பஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
ஏறு ஏற்ற மா ஏறி எண் கணமும் பின் படரமாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின்நீறு ஏற்ற மேனியனாய் நீள்சடை மேல் நீர் ததும்பஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.
சொற்பிரிப்பு
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறிப்பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்தேம் காவி நாறும் திருஆரூர்த் தொல் நகரில்பூங்கோயில் உள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடைஅம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி வாய்ச்செம்பட்டு உடுத்துச் சிறுமான் உரி ஆடைஅம்பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்குவேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
போழ் ஒத்த வெண்மதியம் சூடிப் பொலிந்து இலங்குவேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள் தான் வெருவஊழித் தீ அன்னானை ஓங்கு ஒலி மாப் பூண்டது ஓர்ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனைத்துஞ்சு இருளில் ஆடல் உகந்தானைத் தன் தொண்டர்நெஞ்சு இருள் கூரும் பொழுது நிலாப் பாரித்துஅஞ்சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்னநீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
கார் அமுது கொன்றை கடிநாறு தண் என்னநீர் அமுது கோதையோடு ஆடிய நீள் மார்பன்பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல் நஞ்சுஆர் அமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனைஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
தாட உடுக்கையன் தாமரைப் பூஞ் சேவடியன்கோடலா வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான்ஆடு அரவக் கிண்கிணிக்கால் அன்னான் ஓர் சேடனைஆடும் தீக் கூத்தனை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
சொற்பிரிப்பு
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால்துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்செஞ்சாந்து அணிவித்துத் தன் மார்பில் பால் வெண்நீற்றுஅஞ்சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.