திருமுறை 4 · 4.018 · 10

விடந்தீர்த்ததிருப்பதிகம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
இந்தளம்
தலம்
பொது
நாடு
பொது

1

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரைஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையதுஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
சொற்பிரிப்பு
ஒன்றுகொல் ஆம் அவர் சிந்தை உயர் வரைஒன்றுகொல் ஆம் உயரும் மதி சூடுவர்ஒன்றுகொல் ஆம் இடு வெண்தலை கையதுஒன்றுகொல் ஆம் அவர் ஊர்வது தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழுஇரண்டுகொ லாமவர் எய்தின தாமே.
சொற்பிரிப்பு
இரண்டுகொல் ஆம் இமையோர் தொழு பாதம்இரண்டுகொல் ஆம் இலங்கும் குழை பெண், ஆண்,இரண்டுகொல் ஆம் உருவம்; சிறு மான்,மழு,இரண்டுகொல் ஆம் அவர் எய்தின தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவனமூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலைமூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.
சொற்பிரிப்பு
மூன்றுகொல் ஆம் அவர் கண் நுதல் ஆவனமூன்றுகொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலைமூன்றுகொல் ஆம் கணை கையது வில், நாண்மூன்றுகொல் ஆம் புரம் எய்தன தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாலுகொ லாமவர் தம்முக மாவனநாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்நாலுகொ லாமறை பாடின தாமே.
சொற்பிரிப்பு
நாலுகொல் ஆம் அவர் தம் முகம் ஆவனநாலுகொல் ஆம் சனனம் முதல் தோற்றமும்நாலுகொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்நாலுகொல் ஆம் மறை பாடினதாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவனஅஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணைஅஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.
சொற்பிரிப்பு
அஞ்சுகொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்அஞ்சுகொல் ஆம் அவர் வெல் புலன் ஆவனஅஞ்சுகொல் ஆம் அவர் காயப்பட்டான் கணைஅஞ்சுகொல் ஆம் அவர் ஆடினதாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தனஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
சொற்பிரிப்பு
ஆறுகொல் ஆம்அவர் அங்கம் படைத்தனஆறுகொல் ஆம் அவர் தம் மகனார் முகம்ஆறுகொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால்ஆறுகொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஏழுகொ லாமவர் ஊழி படைத்தனஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.
சொற்பிரிப்பு
ஏழுகொல் ஆம் அவர் ஊழி படைத்தனஏழுகொல் ஆம் அவர் கண்ட இருங்கடல்ஏழுகொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்ஏழுகொல் ஆம் இசை ஆக்கினதாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவனஎட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.
சொற்பிரிப்பு
எட்டுக்கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங்குணம்எட்டுக்கொல் ஆம் அவர் சூடும் இனமலர்எட்டுக்கொல் ஆம் அவர் தோள் இணை ஆவனஎட்டுக்கொல் ஆம் திசை ஆக்கின தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒன்பது போலவர் வாசல் வகுத்தனஒன்பது போலவர் மார்பினில் நூலிழைஒன்பது போலவர் கோலக் குழற்சடைஒன்பது போலவர் பாரிடந் தானே.
சொற்பிரிப்பு
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தனஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழைஒன்பது போல் அவர் கோலக் குழல் சடைஒன்பது போல் அவர் பாரிடம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கனபத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலைபத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
சொற்பிரிப்பு
பத்துக்கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்பத்துக்கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கனபத்துக்கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலைபத்துக்கொல் ஆம் அடியார் செய்கை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.