திருமுறை 4 · 4.016 · 10

திருப்புகலூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
இந்தளம்
தலம்
புகலூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்கையர் கனைகழல் கட்டிய காலினர்மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
செய்யர் வெண்நூலர் கருமான் மறி துள்ளும்கையர் கனைகழல் கட்டிய காலினர்மெய்யர் மெய்ந் நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும்பொய்யர் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்பாக மதிநுத லாளையொர் பாகத்தர்நாக வளையினர் நாக வுடையினர்போகர் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர்சடைப்பாக மதி நுத லாளை ஓர் பாகத்தர்நாக வளையினர் நாக உடையினர்,போகர் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்துதிருந்தா மனமுடை யார்திறத் தென்றும்பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
பெருந்தாழ் சடை முடி மேல் பிறை சூடிக்கருந்தாழ் குழலியும் தாமும் கலந்துதிருந்தா மனம் உடையார் திறத்து என்றும்பொருந்தார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
அக்கு ஆர் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்நக்கு ஆர் இளமதிக் கண்ணியர் நாள்தொறும்உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்தொறும்புக்கார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரிபோர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்பேர்த்தார் பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரிபோர்த்தார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்சேம நெறியினர் சீரை யுடையவர்பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
தூ மன் சுறவம் துதைந்த கொடிஉடைக்காமன் கணைவலம் காய்ந்த முக்கண்ணினர்,சேம நெறியினர் சீரை உடையவர்பூமன் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உதைத்தார் மறலி உருளவொர் காலாற்சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்விபதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
உதைத்தார் மறலி உருள ஓர் காலால்சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்விபதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன்கண்புதைத்தார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ணவிரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கைபுரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றும்தெரிந்தார் கணைகள் செழுந்தழல் உண்ணவிரிந்து ஆர் சடைமேல் விரிபுனல் கங்கைபுரிந்தார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஈண்டார் அழலி னிருவருங் கைதொழநீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்சமாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கை தொழநீண்டார் நெடுந் தடுமாற்ற நிலைஅஞ்சமாண்டார் தம் என்பும் மலர்க்கொன்றை மாலையும்பூண்டார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றிஇறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
சொற்பிரிப்பு
கறுத்தார் மணிகண்டம் கால் விரல் ஊன்றிஇறுத்தார் இலங்கையர் கோன் முடி பத்தும்அறுத்தார், புலன் ஐந்தும் ஆயிழை பாகம்பொறுத்தார் புகலூர்ப் புரி சடையாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.