திருமுறை 4 · 4.015 · 11

பாவநாசத்திருப்பதிகம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
பொது
நாடு
பொது

1

பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை*வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்தஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.* வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.
சொற்பிரிப்பு
பற்று அற்றார் சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்சிற்றம்பலத்து எம் திகழ் கனியைத் தீண்டற்கு அரிய திருஉருவைவெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரை சூழ்ந்தஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்து உள்ளே வைத்தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினைவானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியைமானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
சொற்பிரிப்பு
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினைவானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,மானக் கயிலை மழ களிற்றை மதியைச் சுடரை மறவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினைஅதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனைவிதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினைநெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
சொற்பிரிப்பு
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினைஅதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனைவிதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினைநெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை*உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானைஅறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.* உறந்தையென்பது உறையூர்.
சொற்பிரிப்பு
புறம்பயத்து எம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினைஉறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றைக்கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானைஅறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கோலக் காவிற் குருமணியைக் *குடமூக் குறையும் விடமுணியைஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.*குடமூக்கென்பது கும்பகோணம்.
சொற்பிரிப்பு
கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடம் உணியைஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரைப்பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறை எம் பசும்பொன்னைச்சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையைகருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரியதிருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
சொற்பிரிப்பு
மருகல் உறையு(ம்) மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைகருகாவூரில் கற்பகத்தைக் காண்டற்கு அரிய கதிர் ஒளியைப்பெருவேளூர் எம் பிறப்பு இலியைப் பேணுவார்கள் பிரிவு அரியதிருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தை உள்ளே வைத்தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனைநிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனைஅழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
சொற்பிரிப்பு
எழில் ஆர் இராச சிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றைக்குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனைநிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனைஅழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனைஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியைமேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
சொற்பிரிப்பு
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட்டு உறையும் மணாளனைஆலைக் கரும்பின் இன்சாற்றை அண்ணாமலை எம் அண்ணலைச்சோலைத் துருத்தி நகர் மேய சுடரில் திகழும் துளக்கு இலியைமேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியைஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியைநீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
சொற்பிரிப்பு
சோற்றுத்துறை எம் சோதியைத் துருத்தி மேய தூ மணியைஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அருமணியைநீற்றில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்தோற்றக் கடலை அடல் ஏற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றைவித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனைவைத்தேன் என்றன் மனத்துள்ளே *மாத்தூர் மேய மருந்தையே.* மாத்தூரென்பது - திருவாமாத்தூர்.
சொற்பிரிப்பு
புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்து எம் போர் ஏற்றைவித்து ஆய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனைப்பொய்த்தார் புரம் மூன்று எரித்தானைப் பொதியில் மேய புராணனைவைத்தேன் என் தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானைஅந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்திஎந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.
சொற்பிரிப்பு
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானைஅந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடி சேர்த்திஎந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.