திருமுறை 4 · 4.014 · 11

தசபுராணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
பொது
நாடு
பொது

1

பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த்திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவா னெழுந்து விசைபோய்ப்பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை அருளாய் பிரானே எனலும்அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவனண்டர் அண்ட ரரசே.
சொற்பிரிப்பு
பருவரை ஒன்று சுற்றி அரவம் கை விட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்த்திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசைபோய்ப்பெருகிட மற்று இதற்கு ஓர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்அருள்கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட நிலநின்று தம்ப மதுவப்பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை யிருபாலு நின்று பணியப்பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அப்பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்பர முதல் ஆய தேவர் சிவன் ஆய மூர்த்தி அவன், ஆம் நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக உருவாகி மூவர் உருவில்சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் உருவாகி நின்ற தழலோன்ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு குறளாயொ ராலின் இலைமேல்பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில்சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன்,ஞாலமும் மேலை விண்ணோடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலைமேல்பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்திஅவன், ஆம் நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ டுலகேழு மெங்கு நலியச்சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும்ஓடிய தாரகன்றன் உடலம் பிளந்து ஒழியாத கோபம் ஒழியஆடிய மாநடத்தெ மனலாடி பாதம் அவையா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்து ஒழியாத கோபம் ஒழியஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய் தோடு புரமூன்றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத்தன் அருளாற்கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் அனல்பாய நீறு புரமாமலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள லவனா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்றுஅலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புகத், தன் அருளால்கொலை நலி வாளி, மூள அரவு, அம்கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம் நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற னெரிகேசன் நேடி வருநாள்காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும் அளவின்கண் வந்து குறுகிப்பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த உயிர்வவ்வு பாசம் விடுமக்காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர் தொழுதோது சூடு கழலே.
சொற்பிரிப்பு
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றன், எரிகேசன், நேடி வரும் நாள்காலை நல் மாலைகொண்டு வழிபாடு செய்யும் அளவின்கண், வந்து குறுகிப்பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும் அக்காலனை வீடு செய்த கழல்போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர்பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற படிகண்டு நின்று பயமாய்அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி கமியென் றிறைஞ்சி யகலச்சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை கழல்கண்டு கொள்கை கடனே.
சொற்பிரிப்பு
உயர் தவம் மிக்க தக்கன் உயர்வேள்வி தன்னில், அவி உண்ண வந்த இமையோர்,பயம் உறும் எச்சன், அங்கி மதியோனும், உற்ற படி கண்டு நின்று பயம் ஆய்அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி என்று இறைஞ்சி அகலச்,சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமாஉலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட இருளோட நெற்றி ஒருகண்அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு மடவாள் இறைஞ்ச மதிபோல்அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் அவனா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா,உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண்மலர் தர, அஞ்சி மற்றை நயனம் கை விட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல்அலர் தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும்மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன்எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் எரியென் றிறைஞ்சி யகலத்தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே.
சொற்பிரிப்பு
கழைபடு காடு தென்றல் குயில் கூவ, அஞ்சு கணையோன், அணைந்து புகலும்மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்எழில் பொடி வெந்து வீழ, இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகலத்,தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக நிறைவென்று தன்க ணதனால்உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை பெருமான் உகந்து மிகவும்சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் இதயம் பிளந்த கொடுமைஅடல்வலி ஆழியாழி யவனுக் களித்த அவனா நமக்கோர் சரணே.
சொற்பிரிப்பு
தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்சுடர் அடியான் முயன்று சுழல்வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமைஅடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம் நமக்கு ஒர் சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கடுகிய தேர்செலாது கயிலாய மீது கருதேலுன் வீரம் ஒழிநீமுடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன் மொழிவானை நன்று முனியாவிடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள்நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் நினைவுற்ற தென்றன் மனனே.
சொற்பிரிப்பு
கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது கருதேல், உன் வீரம் ஒழி, நீமுடுகுவது அன்று, தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியாவிடுவிடு என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடி தோள்நெடுநெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.