திருமுறை 4 · 4.012 · 10

திருப்பழனம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
பழனம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரேபன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
சொற்பிரிப்பு
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரேபல் மாலை வரி வண்டு பண்மிழற்றும் பழனத்தான்,முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்பொன்மாலை மார்பன் என் புதுநலம் உண்டு இகழ்வானோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.
சொற்பிரிப்பு
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவாப் பழனத்தான்வண்டு உலாம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்கொண்ட நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மனைக்காஞ்சி* இளங்குருகே மறந்தாயோ மதமுகத்தபனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டேசுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
சொற்பிரிப்பு
மனைக் காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மத முகத்தபனைக்கை மா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான்நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டேசுனைக் குவளை மலர்க் கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வாளோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடுபதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கைவிதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.
சொற்பிரிப்பு
புதியை ஆய் இனியை ஆம் பூந்தென்றால் புறங்காடுபதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்மதியாதார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கைவிதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.
சொற்பிரிப்பு
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்,விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறு ஆய் நின்றானைப்பண் பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பனை; என்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.
சொற்பிரிப்பு
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும்செங்கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான்அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்தம் கோல நறுங்கொன்றைத் தார் அருளாது ஒழிவானோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்தஇணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.
சொற்பிரிப்பு
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மட நாராய்பணை ஆரவாரத்தான் பாட்டு ஓவாப் பழனத்தான்கணைஆர இருவிசும்பில் கடி அரணம் பொடி செய்தஇணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கூவைவாய்* மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.
சொற்பிரிப்பு
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப் பூம்பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடைப்பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.
சொற்பிரிப்பு
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாகப்பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம்கள்ளியேன் நான் இவற்கு என் கனவளையும் கடவேனோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதிகுஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
சொற்பிரிப்பு
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்பஞ்சிக் கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதிகுஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய் கோடு இயையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.