திருமுறை 4 · 4.011 · 10

நமச்சிவாயப்பதிகம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
பொது
நாடு
பொது

1

சொற்றுணை வேதியன் சோதி வானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
சொல் துணை வேதியன் சோதி வானவன்பொன் துணைத் திருந்து அடி பொருந்தக் கை தொழக்கல் துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,நல் துணையாவது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரைஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லதுநாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
விண் உற அடுக்கிய விறகின் வெவ்அழல்உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்றநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்,விடுக்கின் பிரான் என்று வினவுவோம் அல்லோம்அடுக்கல் கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்றநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடிநங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்;அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறு அங்கம்திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள் முடிநங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர்நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்;கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்,ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
இல்லக விளக்கு அது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கு அது சோதி உள்ளதுபல் அக விளக்கு அது பலரும் காண்பது;நல் அக விளக்கு அது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்தன்னெறி யேசர ணாதல் திண்ணமேஅந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்நன்னெறி யாவது நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
முன் நெறி ஆகிய முதல்வன் முக்கணன்தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்நன்நெறியாவது நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழநாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
சொற்பிரிப்பு
மாப் பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கை தொழ,நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்துஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.