திருமுறை 4 · 4.010 · 10

திருக்கெடிலவாணர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க, வெள்ள நீர்வளைத்து எழு சடையினர் மழலை வீணையர்திளைத்தது ஓர் மான்மறிக் கையர் செய்ய பொன்கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஏறினர் ஏறினை ஏழை தன்னொருகூறினர் கூறினர் வேதம் அங்கமும்ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்கீறின வுடையினர் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
ஏறினர் ஏறினை ஏழை தன் ஒருகூறினர்; கூறினர், வேதம் அங்கமும்;ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும்கீறின உடையினர் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீறுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.
சொற்பிரிப்பு
விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறுஉடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண்நிலாப்படர்ந்து அழகு எழு தரு சடையில் பாய்புனல்கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்கெழுமணி அரவினர் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
விழுமணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர்கொழுமணி நெடு வரை கொளுவிக் கோட்டினார்;செழுமணி மிடற்றினர் செய்யர்; வெய்யது ஓர்கெழுமணி அரவினர் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினைதழுவின கழுவுவர் பவள மேனியர்மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்கெழுவின யோகினர் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினைதழுவின கழுவுவர் பவள மேனியர்,மழுவினர், மான்மறிக் கையர், மங்கையைக்கெழுவின யோகினர் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரைநங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக்கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்மங்கையைச் சடைஇடை மணப்பர்; மால்வரை-நங்கையைப் பாகமும் நயப்பர் - தென்திசைக்கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
கழிந்தவர் தலைகலன் ஏந்திக், காடு உறைந்து,இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர்வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்கிழிந்த தேன் நுகர்தரும் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவேகிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்,கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுறக்,கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே,கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெறியுறு விரிசடை புரள வீசியோர்பொறியுறு புலியுரி யரைய தாகவும்நெறியுறு குழலுமை பாக மாகவுங்கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
வெறி உறு விரிசடை புரள வீசி,ஓர்பொறி உறு புலி உரி அரையது ஆகவும்,நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும்,கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பூண்டதேர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.
சொற்பிரிப்பு
பூண்ட தேர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்தூண்டு தோள் அவைபட அடர்த்த தாளினார்ஈண்டு நீர்க் கமல வாய் மேதி பாய்தரக்,கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.