திருமுறை 4 · 4.009 · 12

திருஅங்கமாலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
சாதாரி
தலம்
பொது
நாடு
பொது

1

தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்துதலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.
சொற்பிரிப்பு
தலையே, நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்துதலையாலே பலி தேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னைஎண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.
சொற்பிரிப்பு
கண்காள், காண்மின்களோ – கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னைஎண் தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னைக்கண்காள் காண்மின்களோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ.
சொற்பிரிப்பு
செவிகாள், கேண்மின்களோ! – சிவன், எம் இறை, செம்பவளஎரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்.
சொற்பிரிப்பு
மூக்கே, நீ முரலாய் – முது காடு உறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
சொற்பிரிப்பு
வாயே, வாழ்த்து கண்டாய் – மத யானை உரி போர்த்துப்,பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே, வாழ்த்து கண்டாய்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனைமஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.
சொற்பிரிப்பு
நெஞ்சே, நீ நினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை,மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே, நீ நினையாய்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்றுபைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.
சொற்பிரிப்பு
கைகாள் கூப்பித் தொழீர் – கடி மாமலர் தூவி நின்று,பை வாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்துபூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் வாக்கை யாற்பயனென்.
சொற்பிரிப்பு
ஆக்கையால் பயன் என் – அரன் கோயில் வலம் வந்து,பூக்கையால் அட்டிப், போற்றி என்னாத இவ்ஆக்கையால் பயன் என்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.
சொற்பிரிப்பு
கால்களால் பயன் என் – கறைக் கண்டன் உறைகோயில்கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுதுகுற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றார் ஆருளரோ.
சொற்பிரிப்பு
உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம்பொழுதுகுற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ.
சொற்பிரிப்பு
இறுமாந்து இருப்பன் கொலோ – ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டுச்சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனுந்தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
சொற்பிரிப்பு
தேடிக் கண்டுகொண்டேன் – திரு மாலொடு நான்முகனும்தேடித் தேட ஒணாத் தேவனை, என் உளே தேடிக் கண்டுகொண்டேன்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.