1
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதேஅவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவங்கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
சொற்பிரிப்பு
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில் திருநின்ற செம்மை உளதேஅவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.